35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாயகன் கூட்டணி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் மணி ரத்னம் தயாரிப்பில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வம் திரைப்படம் வெற்றி நடைபோட்டு வசூலை அள்ளியது. இந்த படத்தின் ட்ரைலர் நடிகர் கமல்ஹாசனின் குரலில் வெளியானது.
நடிகர் கமல் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் நிலையில் இன்று மாலை வெளியான அறிவிப்பில் கமல் ஹாசனின் 234வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
https://twitter.com/RKFI/status/1589237063341477890
கடந்த 1987-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த படம் ‘நாயகன்’. மும்பை ‘தாதா’ குறித்து கதையான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட் அடித்தது. இந்த கூட்டணி 35 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைகிறது. இதனால் மணிரத்னம் மற்றும் கமல் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.







