கோத்தகிரி அருகே பகல் நேரத்தில் சாலையில் உலா வந்த ஒற்றை கரடியால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு
மாதங்களாக பனிப்பொழிவின் காரணமாக பகல் நேரங்களில் நிலவிய வெயில் காரணமாக வனப்பகுதிகளில் உள்ள இயற்கை தாவரங்கள், செடி, கொடிகள் அனைத்தும் கருகி உள்ள நிலையில், தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிக்கவும்: சென்னை சவுகார்பேட்டையில் களைகட்டிய ஹோலி பண்டிகை!
இதனால் வனப்பகுதியில் வாழும் விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த
வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு, சாலைகள், தேயிலை தோட்டங்கள்
உள்ளிட்ட பகுதிகளில் உலா வரத்தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள வள்ளுவர் நகர் பகுதியில் கிராமத்திற்கு
செல்லக்கூடிய சாலையில் எந்தவித அச்சமும் இன்றி சர்வசாதாரணமாக ஒற்றை கரடி ஒன்று உலா வந்துள்ளது. இதனை அவ்வழியாக பயணித்து வாகன ஓட்டி தனது கைபேசி மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார்.
இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் இதுபோன்று உலா வரும் வனவிலங்குகளை
வனத்துறையினர் வாகன ரோந்து மேற்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட
நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது. அவ்வாறு மேற்கொள்ளா
விட்டால் மனித விலங்கு மோதல் நடைபெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.







