முகூர்த்த நாள், வார இறுதி விடுமுறை நாட்களுக்காக கூடுதலாக 925 பேருந்துகள் – அரசு விரைவு போக்குவரத்துக்கழகம்!

முகூர்த்த நாள்,  வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு  கூடுதலாக 925 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகூர்த்தநாள்,  வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு ஏப்ரல் 5,6,7 ஆம் தேதிகளில் கூடுதலாக 925…

முகூர்த்த நாள்,  வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு  கூடுதலாக 925 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முகூர்த்தநாள்,  வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு ஏப்ரல் 5,6,7 ஆம் தேதிகளில் கூடுதலாக 925 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்கும் ‘Queen of Tears’ – நெட்ஃபிளிக்ஸ் Top 10 பட்டியலில் முதலிடம்!

அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :

“முகூர்த்த நாளான ஏப்ரல் 5 ஆம் தேதி,  வார விடுமுறை நாட்களான ஏப்ரல் 6,7 ஆம் தேதிகளை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி,  சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை,  திருச்சி,  கும்பகோணம்,  மதுரை,  திருநெல்வேலி,  நாகர்கோவில்,  கன்னியாகுமரி,  தூத்துக்குடி, கோயம்புத்தூர்,  சேலம்,  ஈரோடு,  திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஏப்ரல் 5 ஆம் தேதி 265 பேருந்துகளும்,  ஏப்ரல் 6 ஆம் தேதி 350 பேருந்துகளும் இயக்கப்படும்.

மேலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகை,  வேளாங்கண்ணி, ஓசூர்,  பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஏப்ரல் 5 ஆம் தேதி 55 பேருந்துகளும்,  ஏப்ரல் 6 ஆம் தேதி 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர்,  திருப்பூர்,  ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 925 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  மேலும்,  சொந்த ஊர்களிலிருந்து திரும்பவும் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்”

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.