எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தின் மீன்பிடி தடை காலமாக சொல்லக்கூடிய 61 நாட்கள் ஏப்ரல் 15 இல் தொடங்கி ஜூன் 14-ல் முடிவடைந்தது.…

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை
கடற்படை கைது செய்துள்ளது.

தமிழகத்தின் மீன்பிடி தடை காலமாக சொல்லக்கூடிய 61 நாட்கள் ஏப்ரல் 15 இல்
தொடங்கி ஜூன் 14-ல் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து
பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அந்தோணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற அந்தோணி, ஜேசுராஜா, ரூபன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

நடுக்கடலில் படகு பழுதாகியதால் காற்றின் வேகம் காரணமாக மீன் பிடி படகு
நெடுந்தீவு கடற்பகுதியில் தரை தட்டி நின்றது. இதனையடுத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் கைது செய்தனர். இதனையடுத்து கடற்படை  கைது செய்த மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை
முகாமிற்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து இராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது..

” எஞ்சின் பழுது காரணமாக படகு கரை ஒதுங்கியுள்ளதால் இலங்கை கடற்படையின் உயர் அதிகாரிகள் அனுமதி அளித்தால் படகையும் மீனவர்களையும் விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகையும் விடுவிப்பார்களா அல்லது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில அடைப்பார்களா என்பது பின்னர் தெரியவரும்.” என ஜேசுராஜா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.