குடியிருப்புப் பகுதிக்குள் உலா வரும் புலி – பொதுமக்கள் அச்சம்!

உதகை அருகே கொடநாடு பகுதியில் சாலைகளில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அதனை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை மற்றும்…

உதகை அருகே கொடநாடு பகுதியில் சாலைகளில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அதனை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாக
புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வனப்பகுதியில் இருந்து
வெளியேறும் புலிகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து கால்நடைகள் மற்றும்
வளர்ப்பு செல்ல பிராணிகளை வேட்டையாடி செல்வது வழக்கமாக உள்ளது.


இந்நிலையில் உதகை அருகே உள்ள கோடநாடு செல்லும் சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரு புலிகள் சாலையை கடந்து செல்வதை  அவ்வழியாக வாகனத்தில் சென்ற நபர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்நிலையில் கிராம பகுதியில் பகல் நேரங்களில் சாலையில் சுற்றி திரியும் புலிகளால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனத்துறையினர் புலிகளின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.