முக்கியச் செய்திகள் குற்றம்

பாத்திரத்தில் தவறி விழுந்த 9 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

பல்லாவரத்தில் உள்ள தனியார் பிளே ஸ்கூலில் 9 மாத பெண் குழந்தை பாத்ரூமில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தில் உள்ள பிளே ஸ்கூலில், ஏஞ்சலின் ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வருகின்றார். வழக்கம்போல் இன்றும் தனது 9 மாத மகளுடன் இன்று பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது அருகிலிருந்த அறையில் மகள் கவிஸ்ரீ இத்திகாவை தூங்க வைத்துவிட்டு, பாடம் எடுத்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, குழந்தை அந்த அறையிலிருந்து அருகிலிருந்த பாத்ரூம் அறைக்கு தவழ்ந்து சென்று தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘கல்லூரி கனவு நிகழ்வு குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம்’

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் கதறி அழுது கொண்டே குழந்தை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குக்கொண்டு சென்றுள்ளார். அங்குக் குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. அதனைத்தொடர்ந்து குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 24-ஆம் தேதி முதல் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம்

Halley Karthik

திருச்செந்தூர் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்!

Jeba Arul Robinson

அசாமில் கடும் நிலநடுக்கம்!

Jeba Arul Robinson