ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகம் மீது தாக்குதல்

கேரளாவின் வயநாடு எம்பியான ராகுல் காந்தியின் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சூறையாடப்பட்டது. ஆளும் சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பான SFI அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. வயநாடு அருகே வனப்பகுதியில்…

கேரளாவின் வயநாடு எம்பியான ராகுல் காந்தியின் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சூறையாடப்பட்டது.

ஆளும் சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பான SFI அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

வயநாடு அருகே வனப்பகுதியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட SFI அமைப்பினர், ராகுல் காந்தியின் அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், அலுவலகத்தை சூறையாடினர்.

SFI அமைப்பினரின் இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை மூலம் ராகுல் காந்திக்கு கடும் நெருக்கடியை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்து வரும் நிலையில், அவரது வழியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் கொடுத்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் விமர்சித்துள்ளார்.

இவ்விஷயத்தில், சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தேவையான நடவடிக்கையை எடுப்பார் என எண்ணுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு முதலமைச்சர் பினராயி விஜயனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக வழியில் போராட்டங்களை நடத்தவும், கருத்துக்களை தெரிவிக்கவும் நம் நாட்டில் வழிகள் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், தாக்குதலில் ஈடுபடும் போக்கு தவறானது என கண்டித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.