ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் ஒரே நாளில் 831 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப் பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ள தகவலில், டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஹரியானா, தெலங்கானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இதுவரை 4,700 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. டெல்லிக்கு 2,011 மெட்ரின் டன்னும், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 1,334 மெட்ரிக் டன்னும், மத்திய பிரதேசத்துக்கு 598 மெட்ரிக் டன்னும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இதேபோல ஹரியானா மாநிலத்துக்கு 123 மெட்ரிக் டன்னும், ராஜஸ்தானுக்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கர்நாடகாவுக்கு முதலாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் 120 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை ஏற்றிக்கொண்டு பெங்களூரு சென்று கொண்டிருக்கிறது எனவும் ரயில்வே துறை தரப்பில் தெரிவித்துள்ளது.







