விஜய் படத்துக்காக அமைக்கப்பட்டு வரும் செட் பணிகள், கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன.
நடிகர் விஜய், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தளபதி 65 என்று தற்காலிகத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் ஜார்ஜியா வில் நடந்தது. அங்கு விஜய், பூஜா ஹெக்டே பங்குபெற்ற முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன.
இதையடுத்து இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருக்கிறது. இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் பங்குபெற இருக்கின்றனர். படத்துக் காக, ஷாப்பிங் மால் செட் ஒன்று சென்னையில் அமைக்கப்பட்டு வந்தது. இதற்கிடை யே கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், செட் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஊரடங்கு முடிந்த பிறகு தகுந்த பாதுகாப்புகளுடன் செட் அமைக்கும் பணிகள் தொடங்கும் என தெரிகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் நடக்க இருக் கிறது. இந்தப் படம் பான் இந்தியா படமாக தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.







