தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,62,935 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 12,999 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 4,176 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து 8,91,839 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும், கடந்த ஒரே நாளில் தமிழகத்தில் 93,995 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக தமிழகத்தில் இதுவரை 2,05,44,549 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் கடந்த ஒரே நாளில் 2,558 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் மட்டும் இதுவரை 2,74,734 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







