எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமநாதபுரம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து, பாம்பன் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இரண்டு விசைப்படகுகளுடன் 8 மீனவர்களையும் சிறை பிடித்துள்ளது. கைதான மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
விசாரணைக்கு பின் மீனவர்களையும், படகையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.







