“இரு கண்ணின் கருவளையம் இரவாக…”  – 1 கோடி பார்வைகளை கடந்த #KadhalikkaNeramillai பட பாடல்!

‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ‘என்னை இழுக்குதடி’ பாடல் யூடியூபில் 1 கோடி பார்வைகளை கடந்து ஹிட் அடித்துள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான ‘பிரதர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.…

“Iru Kannin Karuvalayam Yaravaka…” - #KadhalikkaNeramillai Song Crossing 1 Crore Views!

‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ‘என்னை இழுக்குதடி’ பாடல் யூடியூபில் 1 கோடி பார்வைகளை கடந்து ஹிட் அடித்துள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான ‘பிரதர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை எம்.ராஜேஷ் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், நடராஜன் சுப்பிரமணியம், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இதில், ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படம் காதலை மையப்படுத்தி வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை டிசம்பர் 20-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ‘என்னை இழுக்குதடி’ பாடல் நவ.22ம் தேதி வெளியாகி வைரலானது. விவேக் எழுதிய இப்பாடலை ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் தீ பாடியுள்ளனர். இந்த பாடல் யூடியூபில் 1 கோடி பார்வைகளை கடந்து ஹிட் அடித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.