12 நாட்களில் ரூ.780 கோடி – வசூல் வேட்டையில் புதிய சாதனை படைத்த பதான்!

பதான் திரைப்படம், வெளியான 12 நாட்களில் உலகளவில் 780 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில், பதான் திரைப்படம் ஜனவரி 25ம் தேதி…

பதான் திரைப்படம், வெளியான 12 நாட்களில் உலகளவில் 780 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில், பதான் திரைப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியானது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரஹாமும், சிறப்பு தோற்றத்தில் சல்மான்கானும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பல்வேறு  எதிர்ப்புகளுக்கு இடையே, உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் கிட்டத்தட்ட 2500 திரையரங்குகளில் பதான் திரைப்படம் வெளியானது. சமீபகாலமாக இந்தி திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதால் பதான் படத்தின் ரிசல்ட் பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியது.

அந்த எதிர்பார்ப்புகளுக்கு தீணி போடும் விதமாக, இந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான பதான் வசூலை குவித்து, தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது.

பதான் திரைப்படம் இந்தியாவில் மட்டும் வெளியான 12 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இதன்மூலம் பாகுபலி 2, கேஜிஎப் -2 படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளி, வேகமாக 400 கோடி ரூபாயை வசூல் செய்த முதல் இந்தி திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

உலகளவில் இதுவரை 780 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ள பதான் திரைப்படம், விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்ற புதிய மைல்கல்லை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.