டெல்லியில் இன்று நடைபெறும் 77வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பத்தாவது முறையாக தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார்.
நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தினவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில், 21 குண்டுகள் முழங்க, பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். அப்போது, ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவ்விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து 800 பேர், தங்கள் வாழ்க்கைத்துணையுடன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி போர் நினைவுச் சின்னம், ராஜ்காட், டெல்லி ரயில் நிலையம், பிரகதி மைதானம் உள்ளிட்ட 12 இடங்களில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கும் செல்ஃபி பாயிண்ட் நிறுவப்பட்டுள்ளது.
மணிப்பூர் போராட்ட குழுக்கள், சுதந்திர தின விழாவை சீர்குலைக்க வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததால், டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதில், பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
இதனை தொடர்ந்து, 3வது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார், இதையடுத்து, ‘தகைசால் தமிழர் விருது, ‘ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்’ விருது, ‘கல்பனா சாவ்லா’ விருது உள்ளிட்ட விருதுகளை, விருதாளார்களுக்கு வழங்கி முதலமைச்சர் கௌரவிக்கிறார்.
அதேபோல், மாற்றுத்திறனாளி நலனுக்காக அரும்பணியாற்றியவர்களுக்கான விருது, சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகளையும் வழங்குகிறார். சுதந்திர தினத்தையொட்டி சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.