அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயற்கைக்கோள் குறித்த ஆராய்ச்சிக்கூடத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பத்துபேர், கடந்த ஆண்டு, இஸ்ரோ ஆசாதி சாட் -1 செயற்கைக்கோளை அனுப்ப,
மின்னணு உபகரணங்களை தயாரித்தனர்.
நடப்பாண்டிலும் ஆசாதி சாட் – 2 செயற்கைக்கோளை செலுத்துவதற்கும் மின்னணு உபகரணங்கள் தயாரித்துக் கொடுத்தனர். அந்த மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.
இந்நிலையில் திருமங்கலம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயற்கைக்கோள் தயாரிப்பு தொடர்பான ஆராய்ச்சிக் கூடம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளதாகவும்,
அந்தக் கூடத்தை மற்ற பள்ளி மாணவ மாணவிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அந்த பள்ளியின் அறிவியல் ஆசிரியை சந்தியா தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலேயே இப்பள்ளிக்கு மட்டுமே இந்த ஆராய்ச்சி கூடம் அமைப்பதற்கு இஸ்ரோ நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது மிகவும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என ஆசிரியர்கள் பெருமையுடன் தெரிவித்தனர்.







