நாட்டின் 73ஆவது குடியரசு தினம் மூவர்ண கொடி ஏற்றத்துடன் தொடங்கி, சென்னை மெரினாவில் கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது.
குடியரசு தின நிகழ்வில் முப்படைகளின் மண்டல தலைமை அதிகாரிகள், டிஜிபி உள்ளிட்டோரை ஆளுநர் ஆர் என் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அதன் பிறகு, தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி மூவர்ண தேசிய கொடியேற்றி குடியரசு தின நிகழ்வுகளை தொடங்கிவைத்தார். கொடி ஏற்றத்தின் போது, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
தேசிய கீதம் இசைத்த பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதில், வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் விருது, நாரயணசாமி நாயுடு விருது, காந்தி அடிகள் காவலர் பதக்கங்களை ஆகிய விருதுகள் வழங்கப்படும்.
இதனையடுத்து, டில்லியில் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்தி சென்னை அணிவகுப்பில் இடம்பெற்றது. மேலும், கொரோனா காரணமாக கலை நிகழ்ச்சிக்கிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும், கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக குடியரசு தின நிகழ்வுகளை நேரில் காண பொதுமக்களுக்கு அனுமதியில்லை. இந்நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக குடியரசு தின கொண்டாட்டங்களை விரைவாக நடந்து முடிந்தன.









