தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 20 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வீர தீர செயலுக்கான குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் காவல்துறை பதக்கம் ஏ.டி.ஜி.பி வெங்கட்ராமனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி பாலகிருஷ்ணன், ஐ.ஜி சுதாகர், ஐ.ஜி பிரதீப் குமார், ஏ.ஐ.ஜி சரவணன் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
மேலும், சி.ஐ.டி சிறப்பு பிரிவின் காவல் ஆய்வாளர் சிவன் அருளுக்கும் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் காவல்துறை பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: வனத்துறை கண்காணிப்பை மீறி தப்பி ஓடிய சிறுத்தை
இந்தியா முழுவதும் 939 போலீஸ் பதக்கங்கள், 88 குடியரசுத் தலைவரின் சிறந்த சேவைக்கான பதக்கம் மற்றும் 662 காவல் துறை பதக்கம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 20 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








