முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே 800-க்கும் கீழ் பாதிப்பு பதிவாகி வருகிறது. அந்த வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 724 பேருக்கு தொற்றுப் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,30,516 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 743 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,85,946 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 8,041 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,529 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டங்களை பொறுத்தவரை சென்னையில் 131 பேருக்கும் கோயம்புத்தூரில் 124 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொற்றுப் பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவின் மருத்துவத் தலைமையகமாக உள்ளது சென்னை – கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

Web Editor

ஓபிசி பட்டியல்; மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

G SaravanaKumar

நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி!

Nandhakumar