முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

’நான் பார்த்த முதல் முகம் நீ…’ வைரலாகும் ‘வலிமை’ அம்மா பாடல்

அஜித் நடித்துள்ள ’வலிமை’ படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியானது. இந்தப் பாடல் வைரலாகி வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ’வலிமை’. இதில் இந்தி நடிகை ஹூமா குரேஷி ஹீரோயினாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். சுமித்ரா, யோகி பாபு, அச்சுயுத்குமார், பியர்ள் மான, பாவெல் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரமாண்ட செலவில் போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் முதல் பாடல், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி , இந்தப் படத்தின் அம்மா பாடல் இன்று வெளியானது. ’நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ’ என்று அஜித்குமார் குரலில் தொடங்கும் இந்தப் பாடல் அம்மாவின் பெருமையை பேசுகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

இந்தப் பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே வைரலானது. அம்மா பாடல்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும் என்பதால், இந்தப் பாடலும் செம ஹிட்டாகும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

ஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு!

Jeba Arul Robinson

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கவில்லை : மா.சுப்பிரமணியன்

Ezhilarasan

முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மூவர் குழு ஆய்வு!

Nandhakumar