பிரசித்தி பெற்ற நீலகேசியம்மன் திருக்கோயிலில் தூக்கத் திருவிழா!

கன்னியாகுமரியில் உள்ள  பிரசித்தி பெற்ற இட்டகவேலி நீலகேசியம்மன் திருக்கோயிலின் தூக்கத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  700 ஆண்டுகள்  பழைமையான ஆலயங்களுள் ஒன்றான இட்டகவேலி பகுதியில் அமைந்துள்ள நீலகேசியம்மன் திருக்கோயிலின்…

கன்னியாகுமரியில் உள்ள  பிரசித்தி பெற்ற இட்டகவேலி நீலகேசியம்மன் திருக்கோயிலின் தூக்கத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  700 ஆண்டுகள்  பழைமையான ஆலயங்களுள் ஒன்றான இட்டகவேலி பகுதியில் அமைந்துள்ள நீலகேசியம்மன் திருக்கோயிலின் தூக்கத் திருவிழா மற்ற ஆலயங்களை போல் கொடியேற்றத்துடன்  துவங்காமல் அம்மயிறக்கத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான துாக்கத் திருவிழா அம்மயிறக்கத்துடன் தொடங்கியது. முன்னதாக இட்டகவேலி கோயிலிருந்து புறப்பட்ட திருமுடிகளுக்கு ஈழக்குடிவிளை தோட்டத்தில் பழங்குடியின மக்களின் உணவு வகைகளான இளநீர், நுங்கு, பலாபழம் உள்ளிட்ட உணவுகளை கடவுகளுக்கு படைத்து பழங்குடியின மக்களால் பூஜைகள் நடைபெற்றது.

அதனைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான7ஆம் திருவிழா வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும்  29ஆம் தேதி கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது ஆகும்.

—கா. ரூபி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.