தமிழ் நாடு அமைச்சரவையில் 7 பட்டியலின அமைச்சர்கள்…!

தமிழ் நாடு அமைச்சரவையில் பட்டியலின அமைச்சர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழ் நாடு அமைச்சரவை இன்று விரிவு செய்யப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், முதலைச்சர் விஜய் முன்னிலையில், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து தமிழ் நாடு அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ் நாடு அமைச்சரவையில் பட்டியலின அமைச்சர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. எழும்பூர் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த ராஜ்மோகன் கடந்த மே 10 ஆம் தேதி அமைச்சராகப் பதவியேற்றார்.

இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தவெக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்), கமலி (அவிநாசி), மதன் ராஜா (ஒட்டபிடாரம்), தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்), காந்திராஜ் (அரக்கோணம்), காங்கிரஸ் சார்பில் மேலூர் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஸ்வநாதன் ஆகியோர் பதவியேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.