முக்கியச் செய்திகள் மழை

பாலாற்றில் சிக்கிய மாடுகள்; பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை

பாலாற்றின் நடுவே சிக்கித் தவித்த 7 காளை மாடுகளை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். காளை மாடுகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக தீவிரமடைந்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு நீர்நிலைகள் விறுவிறுவென நிரம்பி வருகின்றது. இந்நிலையில், செவிலிமேடு பகுதியில் பாலாற்றில் நடுவே மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை இருபுறமும் தண்ணீர் சுற்றியதால், 7 காளை மாடுகள் பாலாற்றில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வந்தது.

காளை மாடுகளின் உரிமையாளர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு பாலாற்றில் இறங்கி தத்தளித்துக் கொண்டிருந்த ஏழு காளை மாடுகளையும் கரைக்கு கொண்டு வந்தனர். காளை மாடுகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சென்னை ரயில் நிலையங்களில் காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள்: சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுமா?

Halley karthi

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்

Vandhana

கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு பாரத ரத்னா: கெஜ்ரிவால்

Ezhilarasan