சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவுக்கு அனுமதி வேண்டி 7 முறை கடிதங்கள் எழுதியும் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் மாநில அளவிலான அனைத்து இணை இயக்குநர்கள் நலப்பணிகள் மற்றும் 19 மாவட்டசெயற்பொறியாளர்கள் உடனான ஆய்வுகூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் ஹஜ் யாத்திரைக்கு செல்ல உள்ளவர்கள் வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசின் அறிவுரையின் படி மருத்துவ பரிசோதனை உடல் தகுதி தடுப்பூசி ஆகிய வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மே 15 முதல் 29 வரை பரிசோதனை 19 இடங்களில் நடைபெற உள்ளன.
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவுக்கு ஓப்புதல் கோரி 7 முறை கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இன்னும் கடிதம் எழுதுவோம்.
மத்திய மாநில உறவுகளை பாதுகாக்கும் பூன்சி கமிஷன் ஆலோசனையில், ஆளுநர்
வேலைப்பளுவால் மசோதாவை நிறுத்தி வைப்பது சரியானதாக இருக்காது என்று
தெரிவித்திருக்கிறது.
குஜராத்தில் 2012 ஆண்டு தற்போதைய பிரதமர் குஜராத்தின் முதல்வராக இருந்த போது
மாநில முதல்வர்கள் பல்கலைக்கழக வேந்தர் ஆகலாம் என ஆளுநருக்கு மசோதா நிறைவேற்ற அனுப்பி இருக்கிறார்.
இந்நிலையில் பல்கலைக்கழக மானிய குழுவின் நெறிமுறைகளை மீறியதாக இல்லை. அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது. பூன்சி கமிஷன் சார்பில் 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் ஆளுநருக்கு உள்ள வேலை பளுவில் பல்கலைக்கழகங்களை நிர்வகிப்பது முறையாக இருக்காது. மேலும் பணி சுமையாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
ஆளுநருக்கு மேற்குறிப்பிட்ட தகவல்களோடு சட்டத்துறையின் மூலம் மீண்டும் கடிதம் அனுப்பப்படும் தமிழ்நாட்டில் உள்ள இசை பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு முதல்வர் தான் வேந்தராக இருக்கிறார். அந்த மசோதாவிற்கு அப்போது இருந்த ஆளுநர் பி.கே ரோசையா ஒப்புதல் அளித்திருக்கிறார்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.







