முக்கியச் செய்திகள் தமிழகம்

வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்த 600 காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600 காளைகள் வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்தன.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த தச்சன்குறிச்சியில், இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.

இதனையடுத்து வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக சீறிப்பாய்ந்தது. இவற்றை தீரத்துடன் எதிர்த்து நின்று அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கு, அதன் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 38 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் படுகாயமுற்ற 4 பேர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சகோதரி மகன்களிடம் விசாரணை

Ezhilarasan

”தேஜஸ் ரயிலை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டும்”- ரயில்வேத்துறைக்கு எம்.பி சு.வெங்கடேசன் கடிதம்!

Jayapriya

சென்னையில் லேசான நில அதிர்வு

Halley Karthik