முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொங்கல் விழாவையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 நாட்களாக இயக்கப்பட்ட 16 ஆயிரம் பேருந்துகளில் 4 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை இன்று காலை முதல் அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சென்னையில் 5 பேருந்து நிலையங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜினாமா!

Gayathri Venkatesan

கொரோனா பரிசோதனைக்கு ரூ.40 லட்சமா? அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்

Ezhilarasan

பாரதிராஜாவின் பிறந்த நாளை கொண்டாடிய லிங்குசாமியின் #RAP019 டீம்

Gayathri Venkatesan