பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டார். தமிழ்நாட்டில் கடந்த 10-ஆம் தேதி முதல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கி…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டார்.

தமிழ்நாட்டில் கடந்த 10-ஆம் தேதி முதல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அப்போது, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.