காக்கிநாடாவில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கூலி வேலைக்காக சென்று கொண்டிருந்த ஆறு பெண்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.மேலும், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கூலி
வேலை செல்வதற்காக பத்து பெண்கள் ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த ஆட்டோ தனியார் பேருந்து ஒன்று மீது மோதி நொறுங்கி விபத்திக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 10 பெண்களில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து படுகாயம் அடைந்த நான்கு பெண்களையும் மீட்டு சிகிச்சைக்காக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண்களின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
-ம. ஶ்ரீ மரகதம்







