முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு விமானப்படைதளத்தின் மீது ட்ரோன் மூலம் தாக்குதல்: 2 வீரர்கள் காயம்

ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தின் மீது இன்றுஅதிகாலை ட்ரோன்மூலம் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு விமானப்படை வீர ர்கள்லேசான காயம்அடைந்துள்ளனர்.

ஜம்மு விமானநிலையமானது பாகிஸ்தான் எல்லையில் இருந்து 16கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது இந்திய விமானப்படை தளமாகவும் அதே நேரத்தில் பயணிகள் விமான நிலையமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
நள்ளிரவு தாண்டி அதிகாலை இரண்டு மணிகு முன்னதாக இந்த தாக்குதல் நடந்திருப்பதாக தெரிய வருகிறது.

விமானப் படை தளத்தின்தொழில் நுட்பப் பிரிவு பகுதிக்குஅருகே இரண்டு குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டுகள் டிரோன் மூலம் வீசப்பட்டதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் ஒரு கட்டடத்தின் மேற்கூரையில் சிறிய ஓட்டைவிழுந்துள்ளது. மற்றபடி வேறு எந்தபாதிப்பும் இல்லை என்றுகூறப்படுகிறது.

இந்திய விமானப்படை தளத்தின் மீது ட்ரோன் வாயிலாக தாக்குதல் நடத்துவது இதுவே முதன் முறைஎன்று கூறப்படுகிறது.இந்த தாக்குதலை இந்தியா மிகவும் கவலைக்குரிய விஷயமாக பார்க்கிறது. தாக்குதல் சம்பவம் குறித்து தீவிரவாத த்துக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேசிய புலனாய்வு முகமையும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து இந்திய விமானப்படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ஹெச்.எஸ்.அரோராவிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் பகுதிக்கு இன்று வருகை தந்த நிலையில் அதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.

Advertisement:

Related posts

அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சுங்கச்சாவடிகள் இல்லாத இந்தியா; மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்!

Dhamotharan

தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்

Halley karthi

மக்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Halley karthi