முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியில் 6 பேர் காயம்

கோவை தனியார் கல்லூரியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் எஸ்எஸ்ஐ உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், சின்னவேடம்பட்டி-துடியலூர் சாலையில் அமைந்துள்ள எஸ்என்எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி மற்றும் பிளாக் ஷீப் யூடியூப் சேனல் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிகழ்ச்சியைக் காண பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சுமார் 15000 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதற்கு பின்னர் வந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமுற்ற மாணவர்கள் உள்ளே நுழைய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. கேட் மற்றும் சுவற்றின் அருகே நின்றவர்களை தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல முயன்ற போது சுற்றுசுவர் இடிந்தது. இதில் ஐஸ்வர்யா, நந்தினி, ஹரிணி என்ற மூன்று மாணவிகள் கீழே விழுந்த நிலையில், அவர்களை ஏறி மிதித்துக் கொண்டு மாணவ மாணவிகள் உள்ளே நுழைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்செல்லப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் கல்லூரியின் பிரதான நுழைவாயில் வழியாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வந்த கார் உள்ளே சென்றபோது காருக்கு பின்னால் ஒன்றாக மாணவர்கள் சென்றதால்
தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நுழைவாயிலின் முன் பாதுகாப்புப் பணியில் இருந்த சரவணம்பட்டி சட்ட ஒழுங்கு காவல் நிலைய பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் பிலோமினாவையும் கீழே தள்ளிவிட்டு மாணவர்கள் உள்ளே நுழைந்தனர். இதில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கல்லூரி ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி தொடங்கிய போது மைதானத்தில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூச்சிலிட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஓடிய போது, எஸ்.என்.எஸ் அகாடமி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளனர். அந்த மாணவர்களையும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓ.பி.எஸ்.திமுகவிற்கு வந்தால் அரவணைப்போம் – அமைச்சர் மூர்த்தி

Web Editor

கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவது எப்போது?

Gayathri Venkatesan

வங்க கடலில் உருவாகும் ‘சித்ரங்’ புயல்; தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar