தமிழகத்தில் இன்று 366 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக H1N1 வைரஸ் காய்ச்சலால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டனர். அதே போல் கொரோனா தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசின் வழிகாட்டுதல்கள் கடுமையாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தற்போது கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 210 ஆண்கள், 156 பெண்கள் உள்பட மொத்தம் 366 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 85 பேர், செங்கல்பட்டில் 32 பேர் உள்பட 33 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் உள்ளது. அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர் மற்றும் ராமநாதபுரத்தில் பாதிப்பு இல்லை. மேலும், 12 வயதுக்குட்பட்ட 42 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 50 முதியவர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 316 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 845 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.