முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைச்சரவை கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள்!

முக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஆறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை, கடந்த 7 ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் பதவி ஏற்றுக்கொண்டது. புதிய ஆட்சி தொடங்கிய 3 ஆம் நாளான இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடிய முதல், அமைச்சரவை கூட்டம் இது. இந்தக் கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஊரடங்கு முழுமையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும், ஆக்சிஜன் இருப்பை மருத்துவமனைகள் உறுதிசெய்ய வேண்டும்.

தமிழகத்தில் எந்த சூழலிலும் ஆக்சிஜன் வீண்போகக் கூடாது. ரெம்டெசிவிர் விற்பனை யை கண்காணிக்க வேண்டும், கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும். மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை இணைந்து செயல்பட வேண்டும். தடுப்பூசி போடுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Advertisement:
SHARE

Related posts

“திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்..!” – டிடிவி

Jayapriya

நடிகை மீரா மிதுன் ஜாமீன் வழக்கு 23 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு

Gayathri Venkatesan

கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய கனிமொழி!

Niruban Chakkaaravarthi