’வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய்’: முதல்வர் அன்னையர் தின வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இன்று நாடு முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரது…

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இன்று நாடு முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரது தாயுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதில், ‘தாய்’மொழி, ‘தாய்’நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு!. என்னை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் நல்வாழ்த்துகள். மகளிர் நலத்துடன் – அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.