நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சுடலை ஆண்டவர்கோயில் ஆவணி பெருங்கொடை விழா, 6 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.
தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுடலைசுவாமி கோயில்களில்
ஒன்று, தண்ணீரில் விளக்கொளிர்ந்து அதிசயம் நிகழ்த்திய திசையன்விளை,
வடக்குத்தெரு, சுடலைஆண்டவர் கோயில் ஆகும்.
இக்கோயில் கொடைவிழா, கடந்த 20 ல் துவங்கி, 25 வரை 6 நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவில் 5 நாட்கள் விளையாட்டு போட்டி, கோலப்போட்டி, மாராத்தான் போட்டி, பல்சுவைகலைப்போட்டி, இன்னிசைகச்சேரி, கம்ப்யூட்டர்போட்டி, சுமங்கலிபூஜை, நாடகம், இலவச கண்சிகிச்சை முகாம், திருவிளக்கு பூஜை, மெகாமியூஸிக்நைட், கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரபூஜை, மெகந்திபோட்டி, மாக்காப்பு அலங்கார பூஜை, இன்னிசை எக்ஸ்பிரஸ், ஓவியப்போட்டி, சமையல்போட்டி, பரதநாட்டிய நிகழ்ச்சி, மியூஸிக்பயர் இன்னிசை நிகழ்ச்சி, அற்புதவிநாயகர் கோயிலில் இருந்து மின்னொளி அலங்கார ஊர்திகள், மேளதாளம், கரககலை நிகழ்ச்சிகளுடன் பால்குட ஊர்வலம், சுவாமிக்கு பால்அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொடை விழாவின் சிகரநாளான நேற்று காலையில் அன்னபூஜை, தொடர் அன்னதானம், மன்னராஜா கோயிலில் இருந்து முத்துகுடை, தையம், மேளதாளம் ,சிங்காரிமேளம் ,தாரைதப்பட்டை முழங்க பெண்கள், சிறுமியர் பங்கு பெற்ற மஞ்சள்பெட்டி ஊர்வலம், மதியம் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை , சுவாமி மஞ்சள் நீராடல், சமய சொற்பொழிவு ஆகியவையும், இரவு, அரசு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்றவா்களுக்கும் கோலம், விளையாட்டு, கம்ப்யூட்டர், ஒவியம், கலைபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சிலம்பாட்டம், பள்ளிகள் சார்பில் குட்டீஸ் பேஷன்ஸ் ஷோ ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டி, இசைபட்டி மன்றம், இன்னிசைநிகழ்ச்சி, கிராமிய கலைநிகழ்ச்சிகள், விசேஷ அலங்கார பூஜை, சுவாமி மையான வேட்டை, முட்டை விளையாட்டு, அதிகாலையில் சாமபடைப்பு பூஜை
பிரசாதம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தன.
மேலும் இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திசையன்விளை ரோட்டரி கிளப் எலைட், மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் குடிநீர், குளிர்பானம், தேநீர், உணவு வழங்கப்பட்டது. விழாவையொட்டி திசையன்விளை பகுதியில் உள்ள 20- க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு லோக்கல் விடுமுறை விடப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் குழுவினர்கள் செய்திருந்தனர்.
ரூபி.காமராஜ்