உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்துவரும் நிலையில் 5ம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது.
நாட்டின் அதிகமான சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் திகழ்ந்து வருகிறது. கடந்த சில தினங்களாகவே 5மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 7 கட்டங்களாக நடந்துவரும் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 10ம் தேதி தொடங்கியது. இது தொடர்ந்து 4 கட்ட வாக்குப் பதிவுகள் இதுவரை நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் 5ம் கட்ட வாக்குப் பதிவானது இன்று காலை 7 மணிக்கு துவங்கியுள்ளது. 12 மாவட்டங்களில் 61 சட்டமன்ற தொகுதிகளை அடங்கிய பகுதிகளுக்கு இன்றைய வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. இன்றைய வாக்கு பதிவு வேட்டையில் மொத்தமாக 692 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களாக 2.24 கோடி வாக்களர்கள் இருக்கின்றனர். காலை தொடங்கிய வாக்குப்பதிவானது இன்று மாலை 6 மணியோடு நிறைவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2017ம் ஆண்டு இந்த தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 55 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களை வென்றது. சமாஜ்வாதி கட்சி 15 இடங்களையும் காங்கிரஸ் 2 இடங்களையும் வென்றது. இந்த நிலையில் இன்றைய தேர்தல் முக்கிய பங்கு வகிக்கிறது. மொத்தமாக நடைபெரும் 7 கட்ட வாக்குப் பதிவில் அடுத்த 2 கட்ட வாக்குப்பதிவுகள் மார்ச் 3 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.







