முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 58,077-ஆக குறைந்துள்ளது

கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 58,077 ஆக பதிவாகியுள்ளது.

தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 6 லட்சத்து 97 ஆயிரத்து 802 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 58 ஆயிரத்து 77 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட 13 சதவீதம் குரைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 657 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், அதே நேரத்தில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாரத்திற்கு முன்பு 1,49,349 தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொரோனாவை மேலும் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இதுவரை 171.79 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் கொரோனா பெருந்த்தொற்றை எதிர்த்து போராடும் வகையில், சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளும், பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளும், ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைப்பெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram