மக்களை அச்சுறுத்திய சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பிடிக்கப்பட்ட ஆட்கொல்லி சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று ஒப்படைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா மற்றும் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு பெண்மணி மற்றும்…

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பிடிக்கப்பட்ட ஆட்கொல்லி சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று ஒப்படைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா மற்றும் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு பெண்மணி மற்றும் மூன்று வயது சிறுமி என இரண்டு பேர்
உயிரிழந்த நிலையில் நான்கு பேர் இதுவரை காயமடைந்ததுள்ளனர்.  இதனால் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை ஆட்கொல்லி சிறுத்தையாக அறிவித்து சுட்டு பிடிக்க வேண்டும் என கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான தேவாலா, நாடுகாணி, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கடையடைப்பில் ஈடுபட்டனர்.

சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் பணியில் இறங்கிய வனத்துறையினர்,  மேங்கோ
ரேஞ்ச் பகுதியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தொண்டியாளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.  பின்னர் ட்ரோன் மூலம் சிறுத்தை பதுங்கியிருந்த புதருக்குள் கும்கி யானை உதவியுடன் நுழைந்த கால்நடை மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தினர்.  பின்னர்,  உயிருடன் பிடித்த சிறுத்தையை கூண்டில் அடைத்து வனத்துறை வாகனம் மூலம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில்,  முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து,  வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலி ஒப்படைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.