கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் 50 கிலோ மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதி மற்றும் எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் 50 கிலோ மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதி மற்றும் எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது அவ்வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த தமிழக அரசு பேருந்து மற்றும் வாகனங்களில் கடத்தி வந்த சுமார் 50 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

கஞ்சாவை பைகளில் மறைத்து கொண்டு வந்த திண்டுக்கல்லை சேர்ந்த செல்வராஜ் ஒச்சப்பன் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி ஒச்சப்பன் ஆகிய 4 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிப்காட் காவல் துறையினர் மற்றும் ஆரம்பாக்கம் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை கடத்தி வரும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply