இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் மேற்குசுலேவேசி பகுதியில் மாமுஜு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நள்ளிரவு தாண்டி இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்கடர் அளவுகோலில் 6 புள்ளி 2 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 300க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
தூக்கிக் கொண்டிருந்த பலர் கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இதுவரை 35 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால் பலியானோர் எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.







