2026-ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் உடலியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு (Nobel Prize) ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் வழங்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம் அல்லது உடலியங்கியல், இலக்கியம், உலக அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான 2026-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, “ஒளியால் கட்டுப்படுத்தப்படும் அயனி வழித்தடங்கள் மற்றும் ஆப்டோஜெனெடிக்ஸ் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக” கார்ல் டீசெரோத், பீட்டர் ஹெகெமன் மற்றும் ஜார்ஜ் நாகல் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற துறைகளுக்கான வெற்றியாளர்கள் அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்படுகிறார்கள். அந்த வகையில், நாளை (அக். 6) இயற்பியலுக்கான நோபல் பரிசும், நாளை மறுநாள் வேதியியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல, அக். 8-ஆம் தேதி இலக்கியத்திற்கும், 9-ஆம் தேதி அமைதிக்குமான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், அக். 12-ஆம் தேதி இறுதியாக பொருளியலுக்கான பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.