யூடியூப்பில் வெளியாகி உள்ள மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல், ரசிகர்களை கவர்ந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், பொங்கல் திருநாளன்று வெளியானது. நாளை அமேசான் பிரைமில் மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் வாத்தி கம்மிங் பாடல் காட்சிகள் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியான 24 மணி நேரத்தில் 58 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். தற்போது ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.







