ஆண்டு தோறும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று மருத்துவத்திற்கான நோபல் விருதுக்கு, கார்ல் டைசெரோத் (Karl Deisseroth), பீட்டர் ஹெகேமன் (Peter Hegemann) மற்றும் ஜார்ஜ் நாகல் (Georg Nagel) ஆகிய 3 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இன்று 2026 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு பிரான்சிஸ் ஹால்சன்(Francis Halzen) என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்க்யூப் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு ஆற்றிய தீர்க்கமான பங்களிப்புகள் மற்றும் வானியல் தோற்றம் கொண்ட உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டுபிடித்ததற்காக பிரான்சிஸ் ஹால்சன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நோபல் தேர்வு குழு தெரிவித்துள்ளது.




