4-வது டி20 கிரிக்கெட் போட்டி : இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் 3 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. முதல் 3 ஆட்டங்களில் அதிரடி பேட்டிங்கால் மிரட்டி தொடரை வசப்படுத்திய இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடரும் ஆர்வத்தில் உள்ளது. விசாகப்பட்டினம் மைதானத்தில் இதுவரை நான்கு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி மூன்றில் வெற்றி கண்டுள்ளது.

இந்தியா:

சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா அல்லது அர்ஷ்தீப் சிங்.

நியூசிலாந்து:

டிவான் கான்வே, டிம் செய்பெர்ட், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னெர், கைல் ஜாமிசன், மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.