டெல்லியில் 56 நாட்களில் 474 மரணங்கள் : தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையருக்கு NHRC நோட்டீஸ்!

டெல்லி தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லியில் இந்த குளிர்காலத்தில் 56 நாட்களுக்குள் சுமார் 474 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

டிசம்பர் 15, 2024 முதல் ஜனவரி 10, 2025 வரை, குளிரைத் தாங்குவதற்கான ஆடைகள், போர்வைகள் மற்றும் போதுமான தங்குமிடங்கள் போன்றவை கிடைக்காததால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது கடுமையான மனித உரிமை மீறலை எழுப்புவதாக ஆணையம் கண்டறிந்துள்ளது.

எனவே, இந்த விவகாரம் குறித்து ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு டெல்லி தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.