போதைப்பொருள் வழக்குகளில் ஒரே மாதத்தில் 4,706 பேர் கைது – பஞ்சாப் அரசு தகவல்!

கடந்த ஆண்டை விட நிகழாண்டில் போதைப்பொருள் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்தாண்டைவிட நிகழாண்டில் போதைப்பொருள் வழக்குகளில் கைது எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 2025 இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 5 ஆயிரத்து 835 பேர் மீது போதைப்பொருள் தொடர்பான 4 ஆயிரத்து 192 வழக்குகளில் கைது செய்யப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

யுத் நஷேயன் விருத் நடவடிக்கைகளின் கீழ், சராசரியாக ஒரு நாளைக்கு 64 நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்வதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மார்ச் மாதத்தில் மட்டும் 4 ஆயிரத்து 706 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரூ.73.9 லட்சமும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒருநாள் சராசரி கைது எண்ணிக்கை, கடந்தாண்டு 33 என்ற அளவிலேயே இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டான 2023-ல் 41 என்ற நிலையில் இருந்தது. இந்த நிலையில், டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததால், பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு போதைப்பொருள் நடவடிக்கையில் தீவிரமாக களமிறங்கியதாக கூட்டணிக் கட்சிகளான பாஜகவும் ஷிரோமணி அகாலி தளமும் கூறுகின்றன.

கைது எண்ணிக்கை அதிகரித்தாலும், போதைக்கு அடிமையாகி மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படாமல் இருப்பது சந்தேகமளிப்பத் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.