இந்தியாவில் 42% இளைஞர்களுக்கு வேலை இல்லை; நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று ட்விட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி எம்பியின் இந்திய ஒற்றுமைக்கான 4வது நாள் நடை பயணத்தை
கன்னியாகுமரி மாவட்டம், முழகுமூடு பகுதியில் இருந்து தொடங்கினார். கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் நடை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி எம்பி,
தேதி வரை 3 நாட்களில் 38கி.மீ / 3,570கி.மீ நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இன்று முழகு மூடு, சாமியார் மடம், சிராயன்குழி, மார்த்தாண்டத்தில் உணவு இடைவேளை விடப்படும். மாலை மார்த்தாண்டம் முதல் குழித்துறை, களியக்காவிளை வழியாக பாறசாலையில் இன்று இரவு ஓய்வு எடுக்கிறார். இன்று இரவு கேரள மாநிலம் செல்கிறார் ராகுல்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் இந்த பாத யாத்திரையை அவர் மேற்கொள்கிறார்.
வடக்கு நோக்கி ஒவ்வொரு மாநிலங்களாக காஷ்மீர் வரை இந்த பாத யாத்திரை தொடர்கிறது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தி உட்பட 118 தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் ஒரு நாளைக்கு 20-25 கிலோ மீட்டர் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். யாத்திரை மேற்கொள்பவர்களில் ராகுல் காந்தி உட்பட 9 பேர் 50 வயதிற்கு மேற்பட்டோர் ஆவர். 20 பேர் 25லிருந்து 30 வயதுக்குள்ளும், 51 பேர் 31லிருந்து 40 வயதுக்குள்ளும், 38 பேர் 41லிருந்து 50 வயதுக்குள்ளும் உள்ளனர்.
42% of our youth are unemployed.
Is Bharat’s future secure if theirs isn’t?
We walk for them all.
We walk for jobs. pic.twitter.com/e6vC5UnsPS— Rahul Gandhi (@RahulGandhi) September 10, 2022
இந்நிலையில், நாட்டில் உள்ள இளைஞர்களில் 42% பேர் வேலையில்லாமல் உள்ளனர். பாரதத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று 4ஆம் நாள் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
-ம.பவித்ரா