பாஜக, தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 40 பேர் காங்கிரஸ் கட்சியில் இணைய தயாராக இருப்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பாஜக, தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 40 பேர் காங்கிரஸ் கட்சியில் இணைய தயாராக இருப்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்ததாவது..
“ கர்நாடக மாநிலத்தில் வடக்கில் பிதார் நகரில் இருந்து தெற்கே சமராஜநகர் வரை பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 40 தலைவர்கள் காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை நான் இதுவரை வெளியிட வேண்டாம் என நினைத்தேன்.
ஆனால் இப்போது அதற்கான சூழ்நிலை வந்துவிட்டது. மாநிலத் தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு ஒவ்வொருவராக அறிமுகப்படுத்துகிறோம். பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த கட்சிகளைச் சேர்ந்த பலரும் காங்கிரஸில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இது எங்கள் தலைமைக்கும் நாட்டிற்கும் பயனுள்ளது. அதுபோல ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 100 பேரும் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்’ என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். டி.கே. சிவகுமாரின் இந்த பேச்சு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







