நாளை OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?

சமீப காலங்களில் திரையரங்குகளில் படம் வருவதற்கு ஏற்படும் எதிர்பார்ப்பை போலவே ஓடிடி தளங்களில் படம் வெளியாவதற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில், OTT-ல் நாளை வெளியாகும் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.…

சமீப காலங்களில் திரையரங்குகளில் படம் வருவதற்கு ஏற்படும் எதிர்பார்ப்பை போலவே ஓடிடி தளங்களில் படம் வெளியாவதற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில், OTT-ல் நாளை வெளியாகும் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அந்த வகையில் ஹாலிவுட் படம் உள்பட 4 திரைப்படங்கள் நாளை முதல் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன. விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வெளியான மார்க் ஆண்டனி படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அக்டோபர் 13ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது. ஆசிப் அலி, சன்னி வெய்ன் மற்றும் ஜெயிலர் பட வில்லன் விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த படம் காசர்கோல்ட். தங்கச்சுரங்கத்தில் நடைபெறும் திருட்டை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம் அண்மையில் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மிருதுல் நாயர் இயக்கிய இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக இருக்கிறது.

‘சுல்தான் ஆஃப் தில்லி: அசென்ஷன்’ புத்தகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட தொடர் சுல்தான் ஆஃப் தில்லி. தாஹிர் ராஜ் பாசின், அஞ்சும் ஷர்மா, வினய் பதக் ஆகியோர் நடித்த இப்படம் நாளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள மிஷன் இம்பாசிபிள் படவரிசையின் 7வது பாகமான ’மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்’ நாளை அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.