இந்தியா – தென்ஆப்ரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இன்று மாலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது.
தென்ஆப்ரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விலையாடவுள்ளது. டி20 தொடர் இன்றுமுதல் தொடங்கவுள்ளது. டி20 தொடருக்கான இந்திய அணி முன்பே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில். தீபக் ஹூடா காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதில் சபாஷ் அஹமது அணியில் இணைக்கப்ட்டுள்ளார். முகமது சமி கொரோனா தொற்றில் இருந்து குணமாகவில்லை. புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்ரிக்க டி20 தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஷாபாஸ் அகமது.
போலீஸ் குவிப்பு: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான டி-20 தொடரின் முதல் போட்டி இன்று மாலை துவங்க உள்ள நிலையில் போலீஸார் கட்டுப்பாட்டில் திருவனந்தபுரம் மாநகரம் வந்துள்ளது. திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையர் தலைமையில் 1,650 போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
பார்வையாளர்களுக்கு நான்கு இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளன. வீரர்கள் வரும் கோவளம் – திருவானந்தபுரம் சாலையில் தனி பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதியில் மூன்று மணி முதல் இரவு 12 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாரியம் பகுதியில் கழக்கூட்டம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை யில் பெரிய வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாறாக கோவளம் வழியாக மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானம் மற்றும் வெளி பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.








