முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

இரட்டை வேடத்தில் நடிக்கும் ரஜினிக்கு 4 ஜோடிகள் ?

கட்டாய வெற்றியைத் தந்தே ஆக வேண்டிய சூழலில் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். காரணம் யார் ?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த்தின் 169-வது திரைப்படத்தை, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு ஜெயிலர் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது, இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படம் இயக்குநர் நெல்சனுக்கும் ரஜினிக்கும் இது முக்கியமான படமாகும். இருவருமே வெற்றிப்படம் தரவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இயக்குநர் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் பலரின் கவனத்தைப் பெற்றார். இந்தப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இவருக்குத் தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜயை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பீஸ்ட் என பெயர் வைக்கப்பட்ட அப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியானது. ஆனால், அப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. அதேபோல் ரஜினியின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான “தர்பார்”, “அண்ணாத்த” இவ்விருப்பிடங்களும்  அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இப்படி இருக்க ரஜினியின் நண்பரும் அவரது சகப் போட்டியாளருமான “கமல்ஹாசன்’ நடிப்பில் வெளியான “விக்ரம்’ திரைப்படம் கமல்ஹாசனுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் சாதனையையும் முறியடித்து மாபெரும் வெற்றியை அவருக்குத் தேடித்தந்தது. இப்படத்தின் மாபெரும் வெற்றி ரஜினிக்கு தற்போது வெற்றிப்படம் கொடுக்கவேண்டும் என்ற அழுத்தத்தைத் தந்துள்ளது. எனவே, ஜெயிலர் படம் ரஜினி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட ஒரு அழுத்தமான சூழலில்தான் நெல்சனும் ரஜினியும் கைகோர்த்துள்ளனர். ஏற்கனவே வெளியான தகவலின்படி ஜெயிலர் படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறார் எனவும், படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், தமன்னா, மற்றும் ரம்யாகிருஷ்ணன் உட்பட மொத்தம் 4 கதாநாயகிகள் என கூறப்படுகிறது.

மேலும், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு 15-ஆம் தேதி அல்லது 22 -ஆம் தேதிகளில் தொடங்கப்படும் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில், படத்தின் கதாநாயகிகள் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

-யுதி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதலமைச்சர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வரச் சிறப்புப் பிரார்த்தனை

Arivazhagan Chinnasamy

குடும்பத்தினரை அடுத்து நடிகை தீபிகா படுகோனுக்கும் கொரோனா உறுதி

Halley Karthik

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை வயதை உயர்த்தியது ஏன்? – வைகோ எம்.பி

Arivazhagan Chinnasamy