முக்கியச் செய்திகள் தமிழகம்

6 மாதங்களில் ரூ.4.16 கோடி அபராதம் வசூல் – மதுரை ரயில்வே கோட்டம்

தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் நடைபெற்ற அதிரடி பயணச்சீட்டு பரிசோதனையில் ரூ.4.16 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது என மதுரை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்களில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வது, ஆள்மாறாட்டம் செய்து பயணம் செய்வது, ரயில் நிலையங்களில் முகக் கவசம் அணியாமல் இருப்பது போன்றவற்றை தடுக்க பயணச்சீட்டு பரிசோதகர் திடீர் சோதனை நடத்துவார்கள்.

கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் 12 வரை மதுரை கோட்டத்தில் நடத்தப்பட்ட பயணச்சீட்டு பரிசோதனையில் ரூ. 4.16 கோடி பயணக்கட்டண அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பயணச்சீட்டு பரிசோதனையில் அக்டோபர் 12 வரை சென்னை கோட்டம் ரூ. 12.78 கோடியும், சேலம் கோட்டம் ரூ 4.15 கோடியும், திருச்சி கோட்டம் ரூ. 2.81 கோடியும் வசூல் செய்துள்ளன.

தெற்கு ரயில்வேயில் அக்டோபர் 12ஆம் தேதி மட்டும் 37 லட்சம் ரூபாய் பயணக்கட்டணம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே அளவில் முகக்கவசம் அணியாத 32,624 பயணிகளிடமிருந்து ரூபாய் 1.63 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Vandhana

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை : கனிமொழி

Niruban Chakkaaravarthi

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

Jeba Arul Robinson